ரெயில் நிலையங்களில் மேலும் 3 மாதங்களுக்கு பிளாட்பார டிக்கெட் ரூ.50-க்கு விற்பனை - தெற்கு ரெயில்வே அறிவிப்பு

கடந்த மார்ச் 17-ந்தேதி முதல் சென்னை ரெயில்வே கோட்டத்தில், எம்.ஜி.ஆர். சென்ட்ரல் ரெயில் நிலையம், எழும்பூர், தாம்பரம், செங்கல்பட்டு, அரக்கோணம், காட்பாடி ஆகிய முக்கிய ரெயில் நிலையங்களில் பிளாட்பார கட்டணம் ரூ.50 ஆக உயர்த்தப்பட்டது.
கோப்புபடம்
கோப்புபடம்
Published on

சென்னை:

தமிழகத்தில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் கொரோனா தொற்று பரவி மக்களின் வாழ்வாதாரத்தை முடக்கி வருகிறது.

கடந்த ஆண்டு கொரோனா தொற்று உச்சத்தில் இருந்த காலகட்டத்தில் ரெயில் நிலையங்களில் கூட்டத்தை கட்டுப்படுத்துவதற்காக பிளாட்பார டிக்கெட் ரூ.50 ஆக உயர்த்தப்பட்டது. இதன் காரணமாக ரெயில் நிலைய பிளாட்பாரங்களில் கூட்டம் கூடுவது தவிர்க்கப்பட்டது.

இந்த நிலையில் கொரோனா தொற்றின் 2-வது அலை தீவிரம் அடைய தொடங்கியதால் ரெயில் நிலையங்களில் கூட்டத்தை கட்டுப்படுத்தும் வகையில் கடந்த மார்ச் 17-ந்தேதி முதல் சென்னை ரெயில்வே கோட்டத்தில், எம்.ஜி.ஆர். சென்ட்ரல் ரெயில் நிலையம், எழும்பூர், தாம்பரம், செங்கல் பட்டு, அரக்கோணம், காட்பாடி ஆகிய முக்கிய ரெயில் நிலையங்களில் பிளாட்பார கட்டணம் கடந்த ஆண்டை போல மீண்டும் ரூ.50 ஆக உயர்த்தப்பட்டது.

இந்த கட்டண உயர்வு கடந்த 15-ந்தேதி வரை அமலில் இருந்தது. இந்த நிலையில் தற்போது இந்த முக்கிய ரெயில் நிலையங்களில் இன்னும் 3 மாதங்களுக்கு அதாவது நேற்று முதல் செப்டம்பர் 16-ந்தேதி வரை பிளாட்பார டிக்கெட் கட்டணம் ரூ.50 வசூலிக்கப்படும் என்று தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com