தடுப்பூசி நிறுவனங்கள் நேரடியாக விற்க மறுப்பதால் டெல்லியில் தடுப்பூசி பணி நிறுத்தம் - மனிஷ் சிசோடியா தகவல்

டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவாலும், பைசர், மாடர்னா தடுப்பூசிகளை மத்திய அரசு கொள்முதல் செய்து மாநில அரசுகளுக்கு வினியோகிக்க வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தார்.
டெல்லி துணை முதல்-மந்திரி மனிஷ் சிசோடியா
டெல்லி துணை முதல்-மந்திரி மனிஷ் சிசோடியா
Published on

டெல்லி துணை முதல்-மந்திரி மனிஷ் சிசோடியா நேற்று காணொலி வாயிலாக பேசுகையில், டெல்லி அரசுக்கு நேரடியாக தடுப்பூசிகளை விற்க முடியாது, இதுதொடர்பாக மத்திய அரசுடன் மட்டும்தான் பேசுவோம் என்று பைசர், மாடர்னா தடுப்பூசி நிறுவனங்கள் தெரிவித்துவிட்டன.

எனவே, தடுப்பூசி கையிருப்பு தீர்ந்துவிட்டதால், டெல்லியில் 18 முதல் 44 வயதுக்கு உட்பட்டோருக்கான அனைத்து 400 தடுப்பூசி மையங்களும் மூடப்பட்டுவிட்டன. அதேபோல, 45 வயதுக்கு மேற்பட்டோர், சுகாதாரப் பணியாளர்கள், முன்களப் பணியாளர்களுக்கான தடுப்பூசி மையங்களும் பற்றாக்குறை காரணமாக மூடப்பட்டுள்ளன.

முன்னதாக டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவாலும், பைசர், மாடர்னா தடுப்பூசிகளை மத்திய அரசு கொள்முதல் செய்து மாநில அரசுகளுக்கு வினியோகிக்க வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com