திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை மாற்றுத் திறனாளிகள் முற்றுகையிட்டு போராட்டம்

திருவண்ணாமலை அருகே அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தினர் 100 நாள் வேலை கேட்டு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை மாற்றுத் திறனாளிகள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்ட காட்சி
திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை மாற்றுத் திறனாளிகள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்ட காட்சி
Published on

திருவண்ணாமலை:

திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நேற்று அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தினர் 100 நாள் வேலை கேட்டு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்ட தலைவர் ரமேஷ்பாபு தலைமை தாங்கினார். இதில் 30-க்கும் மேற்பட்ட மாற்றுத் திறனாளிகள் கலந்து கொண்டனர்.

அப்போது அவர்கள் கோரிக்கையை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். இது குறித்த தகவலறிந்த திருவண்ணாமலை கிழக்கு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து செய்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். பின்னர் அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com