பெரியகுளம் அருகே மின்சாரம் பாய்ந்து தொழிலாளி பலி

பெரியகுளம் அருகே மின்சாரம் பாய்ந்து தொழிலாளி பலியான சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மின்சாரம் தாக்கி பலி
மின்சாரம் தாக்கி பலி
Published on

பெரியகுளம்:

பெரியகுளம் அருகே உள்ள கீழவடகரை பெருமாள்புரத்தை சேர்ந்தவர் முகமதுயாசின் (வயது 40). கூலித்தொழிலாளி. இவரது வீட்டின் அருகே வசிக்கும் முருகன் மனைவி முருகலட்சுமி. நேற்று முகமதுயாசின் வீட்டின் மின்சார இணைப்பு பெட்டியில் இருந்து கட்டப்பட்டிருந்த இரும்பு கம்பியில் முருகலட்சுமி துணி காயப்போட்டார். அப்போது முருகலட்சுமி மீது மின்சாரம் பாய்ந்தது. இதையடுத்து அவரை காப்பாற்ற கணவர் முருகன், உறவினர் வேல்முருகன், முகமதுயாசின் ஆகியோர் முயன்றனர். இந்தசமயத்தில் அவர்கள் 3 பேர் மீதும் மின்சாரம் பாய்ந்தது. இதனைக்கண்ட அக்கம்பக்கத்தினர் அவர்களை மீட்டு பெரியகுளம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு டாக்டர்கள் பரிசோதித்து பார்த்து, முகமது யாசின் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். முருகலட்சுமி உள்பட 3 பேருக்கும் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதுகுறித்து பெரியகுளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com