

பெரம்பலூர்:
டெல்லியில், புதிய வேளாண் சட்டங்களை திரும்ப பெறக்கோரி விவசாயிகள் நடத்திய டிராக்டர் பேரணியின்போது போலீசார் நடத்திய தடியடியில் விவசாயி ஒருவர் உயிரிழந்ததாக கூறி, மத்திய அரசை கண்டித்து பெரம்பலூர் புதிய பஸ் நிலையம் அருகே நேற்று அனைத்து அரசியல் கட்சி மற்றும் விவசாயிகள் சங்கங்கள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட செயலாளர் செல்லத்துரை, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட செயலாளர் தமிழ்மாணிக்கம் ஆகியோர் தலைமை தாங்கினர். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட அனைத்து அரசியல் கட்சியினர் மற்றும் விவசாயிகள், மத்திய அரசை கண்டித்து பல்வேறு கோஷங்களை எழுப்பினர்.