பேரளம் அருகே சாராயம் விற்ற 4 பேர் கைது

பேரளம் அருகே சாராயம் விற்ற 4 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கைது
கைது
Published on

நன்னிலம்:

பேரளம் போலீசார் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது கந்தங்குடி ஆர்ச் அருகில் சாராயம் விற்பனை செய்த கொல்லாபுரத்தைச் சேர்ந்த முரளி(வயது42) என்பவரை போலீசார் கைது செய்து அவரிடமிருந்து 110 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர். இதைப்போல மருதவஞ்சேரி கடைத்தெருவில் சாராயம் விற்பனை செய்த மானந்தகுடியைச் சேர்ந்த சத்தியமூர்த்தியை(23) போலீசார் கைது செய்து அவரிடமிருந்து 110 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர். மேலும் சின்ன ஆலத்தூர் சுடுகாடு அருகே சாராயம் விற்பனை செய்த சின்ன ஆலத்தூரை சேர்ந்த இளங்கோவன்(45), சின்னஆலத்தூர் பாலம் அருகே சாராயம் விற்ற ராஜமாணிக்கம்(40) ஆகியோரையும் போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்து தலா 110 லி்ட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com