பேரையூர் அருகே டிராக்டர் மோதி வாலிபர் பலி

பேரையூர் அருகே டிராக்டர் மோதி வாலிபர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விபத்து பலி
விபத்து பலி
Published on

பேரையூர்:

பேரையூர் அருகே உள்ள சொக்கம்பட்டியை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன் (வயது 30). சாலிச்சந்தையை சேர்ந்தவர் முனியாண்டி (39). இவர்கள் இருவரும் நேற்று முன் தினம் இரவு மோட்டார்சைக்கிளில் சாலிசந்தையிலிருந்து பேரையூர் நோக்கி வந்து கொண்டிருந்தனர். அப்போது எதிரே வந்த டிராக்டர் ஒன்று அவர்கள் மீது மோதியது. இதில் மோட்டார்சைக்கிளை ஓட்டி வந்த ராமகிருஷ்ணனுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. உடன் சிகிச்சைக்காக பேரையூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டார். அங்கு முதலுதவி செய்யப்பட்டு மேல் சிகிச்சைக்காக மதுரையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி ராமகிருஷ்ணன் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து பேரையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இறந்த ராமகிருஷ்ணன் பேரையூரில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கி ஒன்றில் ஜெனரேட்டர் ஆபரேட்டராக பணிபுரிந்து வந்தார்.

X

Maalai Malar
www.maalaimalar.com