மோசூரில் அடிப்படை வசதிகள் கேட்டு அமைச்சர் காரை முற்றுகையிட்ட பொதுமக்கள்

ராணிப்பேட்டை மாவட்டம் மோசூர் கிராமத்தில் அடிப்படை வசதிகள் கேட்டு அமைச்சர் காரை பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
அமைச்சர் காரை முற்றுகையிட்ட பொதுமக்கள்
அமைச்சர் காரை முற்றுகையிட்ட பொதுமக்கள்
Published on

அரக்கோணம்:

ராணிப்பேட்டை மாவட்டம் மோசூர் கிராமத்தில் நேற்று காலை அம்மா மினி கிளினிக் திறப்பு விழாவுக்கு வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத் துறை அமைச்சர் கே.சி.வீரமணி வந்தார். அவரது காரை அடிப்படை வசதிகள் கேட்டு பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

அப்போது சு.ரவி எம்.எல்.ஏ. காரில் இருந்து இறங்கி வந்து முற்றுகையிட்டவர்களிடம் பேசுகையில் இதுவரை உங்கள் கோரிக்கைகள் குறித்து என்னிடம் தெரிவிக்கவில்லை என்றார். இதையடுத்து பொதுமக்கள் கோரிக்கை மனுவை கொடுத்தனர். மனுவை பெற்று கொண்டு உங்கள் கோரிக்கைகளை செய்து கொடுக்கிறேன் என்றார், அதன் பின்னர் பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com