பென்னாகரம் அருகே கட்டிட மேஸ்திரி தற்கொலை

பென்னாகரம் அருகே விஷம் குடித்து கட்டிட மேஸ்திரி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தற்கொலை
தற்கொலை
Published on

பென்னாகரம்:

தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அடுத்த புள்ளப்பட்டியை சேர்ந்தவர் முனியப்பன். இவருடைய மகன் பெருமாள் (வயது 58). கட்டிட மேஸ்திரி. இவருக்கு கமலா என்ற மனைவியும், ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். சம்பவத்தன்று பெருமாள் விஷம் குடித்து விட்டு வீட்டில் மயங்கி கிடந்தார். குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் அவரை மீட்டு பென்னாகரம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனையில் அவர் சேர்க்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி பெருமாள் பரிதாபமாக இறந்தார். அவர் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து பென்னாகரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com