பென்னாகரம் அருகே என்ஜினீயரிங் மாணவி தற்கொலை

பென்னாகரம் அருகே என்ஜினீயரிங் கல்லூரி மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
தற்கொலை
தற்கொலை
Published on

பென்னாகரம்:

பென்னாகரம் அருகே உள்ள நலப்பரம்பட்டியை சேர்ந்தவர் குமார். கூலித்தொழிலாளி. இவருடைய மகள் வெண்ணிலா (வயது 19). இவர் அந்த பகுதியில் உள்ள ஒரு தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் முதலாமாண்டு படித்து வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் வெண்ணிலாவை பெற்றோர் வீட்டு வேலைகள் செய்யாததால் திட்டியதாக கூறப்படுகிறது.

இதனால் மனம் உடைந்த வெண்ணிலா வீட்டில் விஷம் குடித்து விட்டு மயங்கி கிடந்தார். இதை கண்டு அதிர்ச்சி அடைந்த அக்கம், பக்கத்தினர் மாணவியை மீட்டு பென்னாகரம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி மாணவி பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து பென்னாகரம் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் மருத்துவமனைக்கு விரைந்து சென்று மாணவியின் பெற்றோர் மற்றும் உறவினர்களிடம் விசாரணை நடத்தினர். மாணவி தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். என்ஜினீயரிங் கல்லூரி மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com