பென்னாகரம் அருகே விவசாயி வீட்டில் நகை திருட்டு

பென்னாகரம் அருகே விவசாயி வீட்டில் நகை திருட்டு சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வீடு புகுந்து கொள்ளை
வீடு புகுந்து கொள்ளை
Published on

பென்னாகரம்:

பென்னாகரம் அருகே உள்ள ரங்காபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் குமார் (வயது 35) விவசாயி. இவர் 27-ந் தேதி தனது வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் விவசாய நிலத்தில் வேலை செய்து கொண்டு இருந்தார். பின்னர் மாலை வீட்டுக்கு வந்த போது பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்து உள்ளே சென்று பார்த்தார். அப்போது பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 8½ பவுன் நகை திருட்டு போனது தெரியவந்தது. இதுகுறித்து குமார் பென்னாகரம் போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com