பழவேற்காட்டில் மீன் பிடிக்கும் போது ஏரியில் மூழ்கி மீனவர் பலி

பழவேற்காட்டில் மீன் பிடிக்கும் போது ஏரியில் மூழ்கி மீனவர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மரணம்
மரணம்
Published on

பொன்னேரி:

பொன்னேரி அருகே அவுரிவாக்கம் ஊராட்சியில் அடங்கியது கீழ்குப்பம் மீனவ கிராமம். இங்கு வசிப்பவர் சிகாமணி (வயது 54). அவரது சகோதரர் சீராளன் (48). இவரது மருமகன் ராஜேஷ் (34).

இவர்கள் 3 பேரும் பழவேற்காடு ஏரியை ஒட்டி முகத்துவாரம் பகுதியில் நேற்று மாலை மீன்பிடித்து கொண்டிருந்தனர்.

வலையை சரி செய்ய சிகாமணி ஏரியில் இறங்கினார். அப்போது வலையில் சிக்கிய அவர் ஏரியில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார். தகவலறிந்த திருப்பாலைவனம் சப்-இன்ஸ்பெக்டர் சீனிவாசன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பொன்னேரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து இன்ஸ்பெக்டர் மகிதா அண்ணாகிருஷ்டி வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com