தொண்டையில் புரோட்டா சிக்கி தொழிலாளி பலி

கோவையில் ஓட்டலில் சாப்பிட்ட போது தொண்டையில் புரோட்டா சிக்கி தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.
புரோட்டா
புரோட்டா
Published on

கோவை:

மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்தவர் பூபாய் (வயது 23). இவர் கோவை தாமஸ்வீதியில் உள்ள தனியார் நகை தயாரிக்கும் பட்டறையில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். இவர், நேற்று முன்தினம் இரவு அங்குள்ள ஒரு ஓட்டலுக்கு சென்று புரோட்டா சாப்பிட்டுக் கொண்டு இருந்தார். அப்போது அவருடைய தொண்டையில் திடீரென்று புரோட்டா சிக்கியது. இதனால் மூச்சுத்திணறல் ஏற்பட்டு அவர் மயங்கி கீழே விழுந்தார். 

அதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த ஓட்டல் ஊழியர்கள் மற்றும் அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனாலும் அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். 

இது குறித்து வெறைட்டிஹால் ரோடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com