பெற்றோர் கண்டித்ததால் சிறுமி தூக்குப்போட்டு தற்கொலை

வீட்டில் வேலை செய்யாமல் டி.வி.பார்த்துக் கொண்டிருந்த மகளை பெற்றோர் கண்டித்ததால் அவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தற்கொலை
தற்கொலை
Published on

திருச்சி:

திருச்சி வடக்கு தாரா நல்லூரை சேர்ந்தவர் முத்துப்பாண்டி. மூட்டை தூக்கும் தொழிலாளி. இவரது மகள் கவிபாரதி (வயது 17). கவிபாரதி வீட்டில் வேலை எதுவும் செய்யாமல் டி.வி.பார்த்துக் கொண்டிருந்தாராம். 

இதை அவரது பெற்றோர் கண்டித்தனர். இதனால் மனமுடைந்த கவிபாரதி நேற்று தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுபற்றி காந்தி மார்க்கெட் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

X

Maalai Malar
www.maalaimalar.com