பரமத்திவேலூர் அருகே தொழிலாளி தற்கொலை

பரமத்திவேலூர் அருகே தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தற்கொலை
தற்கொலை
Published on

பரமத்திவேலூர்:

பரமத்திவேலூர் அருகே உள்ள குப்புச்சிபாளையம் கோயக்காடு, ராஜாநகர் பகுதியை சேர்ந்தவர் மணி. இவருக்கு 2 மனைவிகள். இதில் முதல் மனைவி பாப்பாவின் மகன் முத்துராஜ் (வயது 41), கூலித்தொழிலாளி. இவர் தனது தாய் பாப்பாவின் வீட்டில் தனது மனைவி தேன்மொழி மற்றும் மகன்கள் முகேஷ் (17), தனிஷ் (13) ஆகியோருடன் வசித்து வந்தார். இவர்களது வீட்டுக்கு அருகே உள்ள ஒரு வீட்டில் மணி தனது 2-வது மனைவி புஷ்பா மற்றும் மகன் தர்மராஜ் ஆகியோருடன் வசித்து வருகிறார். முத்துராஜ் தனது தாயுடன் குடியிருந்து வந்த ஓட்டு வீட்டை தனது பெயருக்கு எழுதி தருமாறு தனது தந்தையிடம் வற்புறுத்தி வந்துள்ளார். ஆனால் அவர் வீட்டை எழுதி தராததால் மனமுடைந்து காணப்பட்ட முத்துராஜ் நேற்று முன்தினம் வீட்டிலுள்ள விட்டத்தில் கயிற்றால் தூக்குப்போட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதை பார்த்த அவரது மனைவி தேன்மொழி மற்றும் அவரது மகன் முகேஷ் ஆகியோர் தூக்கில் தொங்கிக்கொண்டு இருந்த முத்துராஜை காப்பாற்றி பரமத்திவேலூர் அரசு மருத்துமனையில் சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி முத்துராஜ் உயிரிழந்தார். இது குறித்து பரமத்தி வேலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com