பரமத்திவேலூரில் மணல் கடத்திய லாரி பறிமுதல்- வாலிபர் கைது

பரமத்திவேலூரில் மணல் கடத்திய வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கைது
கைது
Published on

பரமத்திவேலூர்:

பரமத்திவேலூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சண்முகம் மற்றும் போலீசார் தேசிய நெடுஞ்சாலையில் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த லாரியை நிறுத்தி போலீசார் சோதனை செய்தனர். இதில் கரூரில் இருந்து மணல் கடத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் மணல் கடத்திய நன்செய் இடையாறு பகுதியை சேர்ந்த சுகுமார் (வயது 29) என்பவரை கைது செய்தனர். மேலும் மணல் கடத்த பயன்படுத்திய லாரியை பறிமுதல் செய்தனர். இந்த வழக்கு தொடர்பாக அனிச்சம்பாளையம் பகுதியை சேர்ந்த கண்ணதாசன் என்பவரை தேடி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com