பரமத்திவேலூர் அருகே மின்சாரம் தாக்கி கல்லூரி மாணவி பலி

பரமத்திவேலூர் அருகே கல்லூரி மாணவி மின்சாரம் தாக்கி பலியான சம்பவம் குறித்து பரமத்தி வேலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மின்சாரம் தாக்கி பலி
மின்சாரம் தாக்கி பலி
Published on

பரமத்திவேலூர்:

பரமத்திவேலூர் அருகே உள்ள நன்செய் இடையாறு, தெற்கு தெருவைச் சேர்ந்தவர் ராஜகோபால். இவருடைய மகள் இளமதி (வயது 20). இவர் பரமத்திவேலூரில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.ஏ. வரலாறு இளங்கலை இறுதி ஆண்டு படித்து வந்தார்.

நேற்று காலை இளமதி தனது தாயாா் அஞ்சலைதேவியுடன் அமர்ந்து சாப்பிட்டார். பின்னர் வெளியே சென்று செல்போனில் ‌பேசிக்கொண்டிருந்தார்.

இதனிடையே செல்போனில் சார்ஜ் குறைந்ததால், வீட்டிற்குள் உள்ள சுவிட்ச் பாக்சில் செல்போனை சார்ஜ் போட்டுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கி இளமதி தூக்கி வீசப்பட்டு கீழே விழுந்தார்.

இதை பார்த்த அவரது பெற்றோர் மற்றும் அருகில் இருந்தவர்கள் இளமதியை காப்பாற்றி ஆம்புலன்ஸ் மூலம் பரமத்திவேலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

கல்லூரி மாணவி மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் குறித்து பரமத்தி வேலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com