பரமத்தி அருகே ஆட்டோ டிரைவர் தற்கொலை

பரமத்தி அருகே ஆட்டோ டிரைவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தற்கொலை
தற்கொலை
Published on

பரமத்திவேலூர்:

பரமத்தி அருகே உள்ள இருகூர் செஞ்சுடையாம்பாளையத்தை சேர்ந்தவர் கணேசன் (வயது 50). ஆட்டோ டிரைவர். இவருடைய மனைவி கவிதா (42). இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். கணேசனுக்கு மதுகுடிக்கும் பழக்கம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் கணவன், மனைவி இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்தநிலையில் வாழ்க்கையில் விரக்தி அடைந்த கணேசன் நேற்று முன்தினம் வீட்டில் விஷம் குடித்து விட்டு உயிருக்கு போராடினார். இதை பார்த்த அவரது குடும்பத்தினர் அவரை மீட்டு பரமத்திவேலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக நாமக்கல் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி கணேசன் நேற்று இறந்தார். இதுகுறித்து பரமத்தி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com