பரமக்குடி அருகே கடைகளை உடைத்து திருட்டு

பரமக்குடி அருகே கடைகளை உடைத்து திருட்டு சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கொள்ளை
கொள்ளை
Published on

பரமக்குடி:

பரமக்குடி அருகே உள்ள பார்த்திபனூரில் பஸ் நிலையம் அருகே கள்ளிக்கோட்டையைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் என்பவர் மின்னணு சாதனம் விற்பனை செய்து வருகிறார்.

இவர் சம்பவத்தன்று இரவு கடையை மூடி விட்டு வீட்டுக்கு சென்றுள்ளார். மறுநாள் காலையில் வந்து பார்த்தபோது கடை பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது.

அதே போல் அருகில் இருந்த 2 மளிகை கடைகள், பால் விற்பனை செய்யும் கடைகளையும் உடைத்து அதில் இருந்த ரூ.18 ஆயிரத்து 500-ஐ திருடி உள்ளனர்.இதுகுறித்து பாலகிருஷ்ணன் கொடுத்த புகாரின் பேரில் பார்த்திபனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com