பாப்பாரப்பட்டி அருகே பெண் தற்கொலை

பாப்பாரப்பட்டி அருகே குடும்பத்தகராறில் பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
தற்கொலை
தற்கொலை
Published on

பாப்பாரப்பட்டி:

தர்மபுரி மாவவட்டம் பாப்பாரப்பட்டி அருகே உள்ள வேலம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் மோகன். இவர் பாப்பாரப்பட்டி அப்புமுதலி தெருவில் உரக்கடை நடத்தி வருகிறார். கடையின் மேல் மாடியில் உள்ள வீட்டில் குடும்பத்துடன் அவர் வசித்து வருகிறார்.

இவருடைய மனைவி முனியம்மாள் (வயது 40). கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி குடும்ப தகாராறு இருந்து வந்துள்ளது. நேற்று முன்தினம் மீண்டும் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதனால் மனமுடைந்த முனியம்மாள் நேற்று விஷம் குடித்துவிட்டு வீட்டு முன்பு மயங்கி கிடந்தார்.

அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் முனியம்மாள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த பாப்பாரப்பட்டி போலீசார் ஆஸ்பத்திரிக்கு சென்று குடும்பத்தினர் மற்றும் உறவினர்களிடம் விசாரணை நடத்தினர். பின்னர் போலீசார் வழக்குப்பதிவு செய்து முனியம்மாள் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com