பாப்பாரப்பட்டி அருகே மின்சாரம் தாக்கி ஆட்டோ டிரைவர் பலி

பாப்பாரப்பட்டி அருகே மின்சாரம் தாக்கி ஆட்டோ டிரைவர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மின்சாரம் தாக்கி பலி
மின்சாரம் தாக்கி பலி
Published on

பாப்பாரப்பட்டி:

பாப்பாரப்பட்டி அருகே உள்ள சஜ்ஜலஅள்ளி கிராமத்தை சேர்ந்தவர் ஏழுமலை (வயது 30). ஆட்டோ டிரைவர். நேற்று காலை ஏழுமலை குளிப்பதற்காக வாட்டர் ஹீட்டரை போட்டுள்ளார். பின்னர் தண்ணீர் சூடாகி விட்டதா? என்று தொட்டு பார்த்தபோது மின்சாரம் தாக்கி அவர் தூக்கி வீசப்பட்டார். அக்கம், பக்கத்தினர் அவரை மீட்டு தர்மபுரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி ஏழுமலை பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து பாப்பாரப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com