பண்ருட்டி அருகே ஓட்டல் ஊழியர், தூக்குப்போட்டு தற்கொலை

பண்ருட்டி அருகே ஓட்டல் ஊழியர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோப்புபடம்
கோப்புபடம்
Published on

பண்ருட்டி:

அசாம் மாநிலத்தை சேர்ந்தவர் ஆகாஷ்பவுல்(வயது 20). இவர் பண்ருட்டியில் தங்கி, கும்பகோணம் சாலையில் உள்ள ஒரு ஓட்டலில் ஊழியராக பணிபுரிந்து வந்தார். ஆகாஷ்பவுல் நேற்று முன்தினம் இரவு தான் தங்கியிருந்த அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். 

இதுபற்றி தகவல் அறிந்ததும் பண்ருட்டி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, ஆகாஷ்பவுல் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பண்ருட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

இந்த சம்பவம் குறித்து போலீசார் நடத்திய விசாரணையில், சொந்த ஊரில் உள்ள காதலியை பிரிந்து வந்த ஏக்கத்தில் இருந்த ஆகாஷ்பவுல் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

X

Maalai Malar
www.maalaimalar.com