திருப்பூரில் பனியன் நிறுவன தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை

திருப்பூரில் குடும்பத்தகராறில் பனியன் நிறுவன தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
தற்கொலை
தற்கொலை
Published on

வீரபாண்டி:

தேனி மாவட்டம் குமனைத்தோட்டம் பகுதியை சேர்ந்தவர் தேவராஜ் மகன் ரஞ்சித்குமார் (வயது 28). இவர் தனது மனைவி கீர்த்தனா மற்றும் 2 வயது மகனுடன் திருப்பூர் முருகம்பாளையம் பாரக்காடு 4-வது வீதியில் வசித்து வந்தார். மேலும் திருப்பூரில் உள்ள ஒரு பனியன் நிறுவனத்தில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார்.

இந்த நிலையில் கணவன்-மனைவி இருவருக்கும் இடையே அடிக்கடி குடும்பத்தகராறு ஏற்பட்டு வந்ததாக தெரிகிறது. இந்த நிலையில் கடந்த வாரம் அதுபோல் தம்பதிக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதனால் கோபமடைந்த மனைவி கீர்த்தனா தனது 2 வயது மகனுடன் தேனிக்கு சென்றதாக தெரிகிறது.

இதனால் வாழ்க்கையில் வெறுப்படைந்து மனவேதனையில் இருந்த ரஞ்சித்குமார் நேற்று முன்தினம் இரவு வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். நேற்று காலையில் நீண்ட நேரம் ஆகியும் கதவு திறக்கப்படாததால் சந்தேகம் அடைந்த அருகில் இருப்பவர்கள் கதவை தட்டியபோது கதவு திறக்காததால் கதவை உடைத்து திறந்து உள்ளே சென்று பார்த்தனர்.

அப்போது ரஞ்சித்குமார் தூக்குப்போட்டு தற்கொலை செய்த நிலையில் இறந்து இருந்தது தெரியவந்தது. உடனடியாக இது குறித்து வீரபாண்டி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

அதன் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற வீரபாண்டி போலீசார் ரஞ்சித்குமார் உடலை மீட்டு திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் தற்கொலை குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com