பனவடலிசத்திரம் அருகே வாலிபர் விஷம் குடித்து தற்கொலை

பனவடலிசத்திரம் அருகே வாலிபர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தற்கொலை
தற்கொலை
Published on: 

பனவடலிசத்திரம்:

பனவடலிசத்திரம் அருகே உள்ள சாயமலை மடத்துப்பட்டி ஊரைச் சேர்ந்தவர் சின்னமாரி மகன் நாகராஜ் (வயது 26). சம்பவத்தன்று இவர் தனது தோட்டத்தில் உள்ள பூச்சி மருந்தை எடுத்து குடித்து மயங்கி கிடந்தார். இதையடுத்து அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நாகராஜ் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தேவர்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com