பள்ளிபாளையத்தில் வீடு புகுந்து திருடிய விசைத்தறி தொழிலாளி கைது

பள்ளிபாளையத்தில் வீடு புகுந்து திருடிய விசைத்தறி தொழிலாளியை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கைது
கைது
Published on

பள்ளிபாளையம்:

பள்ளிபாளையம் ஆவரங்காடு பகுதியை சேர்ந்தவர் ராஜமாணிக்கம் (வயது 50), விசைத்தறி தொழிலாளி. நேற்று காலை இவர் வீட்டில் தூங்கி கொண்டிருந்தார். அப்போது அவரது வீட்டுக்குள் புகுந்த மர்ம நபர் ஒருவர் வீட்டின் அலமாரியில் இருந்த ரூ.1,000-ஐ திருடிக்கொண்டு தப்பி செல்ல முயன்றார்.

இதை கவனித்த ராஜமாணிக்கம் அக்கம்பக்கத்தினர் உதவியுடன், தப்பி ஓட முயன்ற மர்ம நபரை கையும், களவுமாக பிடித்து பள்ளிபாளையம் போலீசில் ஒப்படைத்தார். பிடிபட்டவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில், அவர் காந்திபுரத்தை சேர்ந்த விசைத்தறி தொழிலாளி சுப்பிரமணி (57) என்பதும், திருட்டு முயற்சியில் ஈடுபட்டதும் தெரியவந்தது. இதையடுத்து சுப்பிரமணி மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com