பள்ளிபாளையம் அருகே விவசாயிகள் கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம்

பள்ளிபாளையம் அருகே ஆனங்கூர் கிராமத்தில் நேற்று விவசாயிகள் கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆர்ப்பாட்டம்
ஆர்ப்பாட்டம்
Published on

பள்ளிபாளையம்:

தமிழக அரசு வருவாய்த்துறை, காவல் துறை, ஐ.டி.பி.எல். திட்ட உயர் அதிகாரிகள் விவசாயிகளுடன் ஏற்படுத்தி கொண்ட ஒப்பந்தத்தை மீறி திட்ட பணிகளை தொடர்ந்த ஐ.டி.பி.எல். நிர்வாகத்தையும், துணை வந்த வருவாய் துறை அதிகாரிகளை கண்டித்தும் பள்ளிபாளையம் அருகே ஆனங்கூர் கிராமத்தில் நேற்று விவசாயிகள் கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. விவசாயி ராஜவேல் தலைமை தாங்கினார். மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பெருமாள் முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் செல்லமுத்து, குருசாமி, சுப்பிரமணி, செங்கோட்டையன், தீபன், கலாமணி, வள்ளியம்மாள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com