பள்ளிபாளையம் அருகே காவிரி ஆற்றில் ஆண் பிணம்- போலீசார் விசாரணை

பள்ளிபாளையம் அருகே காவிரி ஆற்றில் ஆண் பிணம் கிடந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மரணம்
மரணம்
Published on

பள்ளிபாளையம்:

பள்ளிபாளையம் அருகே சமயசங்கிலி பகுதியில் உள்ள காவிரி ஆற்றில் சுமார் 30 வயது மதிக்கத்தக்க ஆண் பிணம் ஒன்று மிதந்து கொண்டிருந்தது. இதுகுறித்து சமயசங்கிலி கிராம நிர்வாக அலுவலர் தியாகராஜன் பள்ளிபாளையம் போலீசாருக் தகவல் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் அங்கு சென்று பிணத்தை கைப்பற்றி அரசு பள்ளிபாளையம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இறந்த நபர் நீல நிற ஜீன்ஸ் பேண்டும், மஞ்சள் கலரில் பூ போட்ட சட்டையும் அணிந்திருந்தார். அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்பது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com