

மேலூர்:
மேலூரில் உள்ள புதுசுக்காம்பட்டியை சேர்ந்த போத குருவின் மனைவி போதும்பொண்ணு (வயது56). இவர் நேற்று காலை 11 மணிக்கு பல்லவராயன்பட்டி அருகே சாலையில் நடந்து வந்துள்ளார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்கள் போதும்பொண்ணு அணிந்து இருந்த 3 பவுன் தங்க சங்கிலியை பறித்துக் கொண்டு தப்பிச்சென்றுவிட்டனர். பட்ட பகலில் நடந்த இந்த வழிப்பறி சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த மேலூர் போலீசார் இப்பகுதியில் கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை சேகரித்து வாலிபர்களை பிடிக்க தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.