பலமநேர் அருகே திருட்டில் ஈடுபட்ட 2 பேர் கைது

பலமநேர் அருகே திருட்டில் ஈடுபட்ட 2 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து ஒரு மோட்டார்சைக்கிள், 14 பவுன் நகை ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.
கைது
கைது
Published on

ஸ்ரீகாளஹஸ்தி:

பெங்களூருவைச் சேர்ந்த ரஞ்சித்குமார் தனது மோட்டார் சைக்கிளை கடந்த 15-ந்தேதி பலமநேர் பஸ் நிலையம் அருகில் நிறுத்தி வைத்திருந்தார். அவரின் மோட்டார் சைக்கிளை மர்மநபர்கள் யாரோ திருடிச் சென்று விட்டனர். இதுகுறித்து அவர் பலமநேர் போலீசில் புகார் செய்தார்.

போலீசார் வழக்குப்பதிவு செய்து பலமநேரை அடுத்த கண்டாவூர் மேம்பாலம் அருகில் நேற்று முன்தினம் இரவு தீவிர வாகனச் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு மோட்டார்சைக்கிளை நிறுத்தி, அதில் வந்த 2 பேரிடம் விசாரித்தனர்.

அந்த மோட்டார்சைக்கிளுக்கு உரிய ஆவணங்கள் அவர்களிடம் இல்லை, எனத் தெரிய வந்தது. அந்த மோட்டார்சைக்கிள் கடந்த 15-ந்தேதி காணாமல்போன ரஞ்சித்குமாருக்கு சொந்தமானது எனத் தெரிய வந்தது.

மோட்டார்சைக்கிளில் வந்த இருவரும் பெங்களூரு வடக்கு தூரவாணிநகர் பகுதியைச் சேர்ந்த ராஜேஷ் என்ற கிராக்ராஜு (வயது 21) என்றும் மற்றொருவர் சித்தூர் மாவட்டம் குப்பம் பகுதியைச் சேர்ந்த வெங்கடேஷ் (21) என்றும் தெரிய வந்தது.

இருவரும் கூட்டாக சேர்ந்து சித்தூர் மாவட்டத்தில் பைரெட்டிப்பள்ளி, கங்கவரம், கண்டாவூர் ஆகிய பகுதிகளில் வீடுகளில் புகுந்து நகை, பணத்தை திருடி வந்ததாக கூறினர். இதையடுத்து இருவரும் கைது செய்யப்பட்டனர்.

அவர்களிடம் இருந்து ரஞ்சித்குமாரின் மோட்டார்சைக்கிள், 14 பவுன் நகைகள் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். கைதான இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com