பலமநேர் அருகே மதுபானம் கடத்திய 2 பேர் கைது

பலமநேர் அருகே மதுபானம் கடத்திய 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கைது
கைது
Published on

ஸ்ரீகாளஹஸ்தி:

சித்தூர் மாவட்டம் பலமநேர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயராமன் தலைமையில் போலீசார் பலமநேர்-குடியாத்தம் நெடுஞ்சாலையில் பேருப்பள்ளி வளைவு அருகில் நேற்று முன்தினம் இரவு தீவிர வாகனச் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது பலமநேர் மண்டலம் நூனேவாரிப் பள்ளி கிராமத்தைச் சேர்ந்த சுப்பிரமணியம் (வயது 43) என்பவர் கர்நாடகா மதுபானத்தை கடத்தி வந்தார். அவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 76 மது பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர்.

அதேபோல் பலமநேரை அடுத்த நாகமங்கலம் மேம்பாலம் அருகில் கர்நாடகா மதுபானம் வைத்திருந்த கங்கவரம் மண்டலம் கீழப்பட்டு பகுதியைச் சேர்ந்த ஹேமந்த்ரெட்டி (40) என்பவரை போலீசார் கைது செய்தனர். இவரிடம் இருந்து 50 மதுபான பாக்கெட்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com