பாளை அருகே கடை பூட்டை உடைத்து ரூ.20 ஆயிரம் கொள்ளை

பாளை அருகே கடை பூட்டை உடைத்து ரூ.20 ஆயிரம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கொள்ளை
கொள்ளை
Published on

நெல்லை:

பாளை சமாதானபுரம் சங்கர் காலனியை சேர்ந்தவர் செல்லத்துரை (வயது46). இவர் சிவந்திப்பட்டி மலையடிவார பகுதியில் தார் விற்பனை நிலையம் வைத்துள்ளார்.

நேற்று அவர் கடைக்கு சென்ற போது, கடையின் முன்பக்க பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது.

உள்ளே சென்று பார்த்த போது மேஜையில் வைத்திருந்த ரூ.10 ஆயிரம் ரொக்கப்பணம் மற்றும் கடையில் இருந்த விலை உயர்ந்த இரும்பு பொருட்கள் ஆகியவையும் கொள்ளையடிக்கப்பட்டு இருந்தது.

கொள்ளை போன பொருட்களின் மொத்த மதிப்பு ரூ.20 ஆயிரம் ஆகும். இதுகுறித்து செல்லத்துரை சிவந்திப்பட்டி போலீசில் புகார் செய்தார்.

சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினார்கள். கைரேகைகளையும் பதிவு செய்துள்ளனர். தப்பி ஓடிய கொள்ளையனை போலீசார் தேடி வருகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com