பாளை அருகே ஆட்டோவில் இருந்து தவறி விழுந்து டிரைவர் பலி

பாளை அருகே ஆட்டோவில் இருந்து தவறி விழுந்து டிரைவர் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மரணம்
மரணம்
Published on

நெல்லை:

பாளையை அடுத்த கிருஷ்ணாபுரத்தை சேர்ந்தவர் சண்முகராஜா (வயது35), ஆட்டோ டிரைவர். சம்பவத்தன்று இவர் ஆட்டோவில் சிவந்திப்பட்டிக்கு சென்று கொண்டிருந்தார்.

அப்போது ஒரு திருப்பத்தில் திரும்பும் போது எதிர்பாராத விதமாக சண்முக ராஜா ஆட்டோவில் இருந்து தவறி கீழே விழுந்தார். இதில் படுகாயம் அடைந்த அவரை பாளை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார்.

X

Maalai Malar
www.maalaimalar.com