பாலக்கோட்டில் கஞ்சா கடத்திய வாலிபர் கைது

பாலக்கோட்டில் கஞ்சா கடத்திய வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கைது
கைது
Published on

பாலக்கோடு:

பாலக்கோடு தக்காளி மார்க்கெட் பகுதியில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சக்திவேல் மற்றும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது தர்மபுரியில் இருந்து பாலக்கோடு நோக்கி ஸ்கூட்டியில் வந்த வாலிபர் போலீசாரை பார்த்ததும் திரும்பி செல்ல முயன்றார். இதை கவனித்த போலீசார், அந்த வாலிபரை பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது அவர் அரூர் பகுதியை சேர்ந்த பழனி மகன் மணிகண்டன் (வயது 23) என்பதும், கஞ்சா கடத்தி வந்ததும் தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் அந்த வாலிபரை கைது செய்தனர். மேலும் அவர் ஓட்டி வந்த ஸ்கூட்டி மற்றும் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com