பாலக்கோடு அருகே மதுபாட்டில்கள் விற்றவர் கைது

பாலக்கோடு அருகே மதுபாட்டில்கள் விற்றவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கைது
கைது
Published on

பாலக்கோடு:

பாலக்கோடு அருகே கணபதி கொட்டாய் கிராமத்தை சேர்ந்தவர் சாவித்திரி (வயது 37). இவர் வீட்டில் மதுபாட்டில்களை பதுக்கி வைத்து கூடுதல் விலைக்கு விற்பனை செய்வதாக பாலக்கோடு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் விரைந்து சென்று சாவித்திரியை கைது செய்தனர். மேலும் அவர் விற்பனைக்காக வைத்திருந்த 30 மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com