பாலக்கோடு அருகே மோட்டார் சைக்கிள் மோதி விவசாயி பலி

பாலக்கோடு அருகே மோட்டார் சைக்கிள் மோதி விவசாயி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விபத்து பலி
விபத்து பலி
Published on

பாலக்கோடு:

பாலக்கோடு அருகே உள்ள அண்ணாமலைஅள்ளி கிராமத்தை சேர்ந்தவர் கண்ணுபையன் (வயது 70). விவசாயியான இவர் ஆரதஅள்ளி நோக்கி நடந்து வந்து கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிள் அவர் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த கண்ணுபையன் சம்பவ இடத்திலேயே பலியானார். இந்த விபத்து குறித்து பாலக்கோடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com