

பாலக்கோடு:
பாலக்கோடு பகுதியில் போலீசார் தீவிர ரோந்து சென்றனர். அப்போது கணபதி கொட்டாய் பகுதியை சாந்தா (55) காவாப்பட்டியை சேர்ந்த ஜம்ம்பரி (60) ஆகியோர் வீடுகளில் மதுபாட்டில்களை பதுக்கி வைத்து கூடுதல் விலைக்கு விற்பனை செய்தது தெரிய வந்தது. இதையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து 160 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.