ஜம்மு காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் மீண்டும் அத்துமீறல்

ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் பாகிஸ்தான் ராணுவ மீண்டும் அத்துமீறி தாக்குதல் நடத்தியது.
கோப்புப் படம்
கோப்புப் படம்
Published on

ஸ்ரீநகர்:

ஜம்மு காஷ்மீர் எல்லையில் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி தாக்குதல் நடத்துவதை பாகிஸ்தான் ராணுவம் வாடிக்கையாகக் கொண்டுள்ளது. பாகிஸ்தான் ராணுவத்தினரின் அத்துமீறிய தாக்குதல்களுக்கு இந்திய ராணுவமும் தகுந்த பதிலடி கொடுத்து வருகிறது. 

இதற்கிடையே, பாகிஸ்தான் ராணுவம் எல்லை தாண்டி தாக்குதல் நடத்துவது கடந்த சில மாதங்களாக அதிகரித்து வந்துள்ளது. இந்த ஆண்டில் இதுவரை 1400-க்கும் மேற்பட்ட முறை பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறித் தாக்குதல் நடத்தி உள்ளது.

இந்நிலையில், ஜம்மு-காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள பாலகோட் பகுதியில் சிறிய ரக ஆயுதங்கள் மற்றும் மோட்டார் குண்டுகள் மூலம் பாகிஸ்தான் ராணுவம் இன்று அத்துமீறித் தாக்குதல் நடத்தியது. இதற்கு இந்திய ராணுவ தரப்பிலிருந்தும் தகுந்த பதிலடி கொடுக்கப்பட்டது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com