கோவில்பட்டியில் பெயிண்டர் கழுத்தை அறுத்து கொலை

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் பெயிண்டர் கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கொலை
கொலை
Published on

கோவில்பட்டி:

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி ஸ்டாலின் காலனியை சேர்ந்தவர் மதன்குமார் (வயது21). பெயிண்டரான இவர் அவ்வப்போது சமையல் வேலைக்கும் சென்று வருவார்.

நேற்று மாலை மதன்குமார் டீ குடித்துவிட்டு வருவதாக வீட்டில் கூறிவிட்டு வெளியே சென்றார். ஆனால் வெகு நேரமாகியும் அவர் வீடு திரும்பவில்லை.

இதனால் அதிர்ச்சியடைந்த அவரது குடும்பத்தினர் உறவினர் வீடுகள் உள்பட பல்வேறு இடங்களில் தேடியும் அவர் கிடைக்கவில்லை.

இந்நிலையில் மந்தித்தோப்பு தனியார் குடிநீர் நிறுவனம் அருகே உள்ள பகுதியில் மதன்குமார் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்தார்.

இது குறித்து தகவலறிந்த கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவில்பட்டி அரசு மருத்துவனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார் மதன் குமாரை கொலை செய்தது யார்? எதற்காக கொலை செய்தனர்? முன்விரோதம் காரணமாக கொலை நடந்ததா? என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com