விழுப்புரம் அருகே மின்சாரம் தாக்கி பெயிண்டர் பலி

விழுப்புரம் அருகே மின்சாரம் தாக்கி பெயிண்டர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோப்புபடம்
கோப்புபடம்
Published on

விழுப்புரம்:

விழுப்புரம் சேவியர் காலனி பகுதியை சேர்ந்தவர் வின்சன் (வயது 40) , பெயிண்டர். இவர் நேற்று காலை விழுப்புரம் கீழ்பெரும்பாக்கம் ரசாக் லே-அவுட் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் பெயிண்டிங் வேலையில் ஈடுபட்டிருந்தார். அப்போது அருகில் உள்ள மின் வயரில் அவரது கை பட்டது. இதில் மின்சாரம் தாக்கியதில் தூக்கி வீசப்பட்ட வின்சன் பலத்த காயமடைந்தார். 

உடனே அருகில் இருந்த பொதுமக்கள், அவரை மீட்டு சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி அவர் இறந்தார்.

இதுகுறித்த புகாரின்பேரில் விழுப்புரம் நகர போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com