பெயிண்டர் வி‌ஷம் குடித்து தற்கொலை

குடிப்பழக்கத்தை மனைவி கண்டித்ததால் பெயிண்டர் வி‌ஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தற்கொலை
தற்கொலை
Published on

கோவை:

கோவை வேலாண்டிப்பாளையத்தை சேர்ந்தவர் செல்வக்குமார் (வயது 40). பெயின்டர். இவரது மனைவி ரங்கநாயகி (35). செல்வக்குமாருக்கு குடிப்பழக்கம் உள்ளது.

இதனால் கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. சம்பவத்தன்று செல்வக்குமார் குடிபோதையில் வீட்டுக்கு வந்தார். இதனால் மீண்டும் அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது.

அப்போது ரங்கநாயகி அவரை கண்டித்தார். இதனால் மனவேதனை அடைந்த செல்வக்குமார் விரக்தியடைந்து மதுவில் வி‌ஷத்தை கலந்து குடித்து மயங்கி விழுந்தார்.

இதைகண்டு அதிர்ச்சி அடைந்த ரங்கநாயகி அவரை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தார். ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து சாய்பாபாகாலனி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com