ஒரத்தநாட்டில் லாட்டரி சீட்டு விற்றவர் கைது

ஒரத்தநாட்டில் லாட்டரி சீட்டு விற்றவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கைது
கைது
Published on

ஒரத்தநாடு:

ஒரத்தநாடு பகுதியில் அரசால் தடை செய்யப்பட்ட வெளிமாநில லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனை தொடர்ந்து ஒரத்தநாடு போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது ஒரத்தநாடு தேரடி முக்கம் அருகே ஆன்லைன் மூலம் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்பனை செய்த ஒரத்தநாடு மாரியம்மன்கோவில் தெருவைச் சேர்ந்த அசோக்குமார் (வயது37) என்பவரை போலீசார் மடக்கி பிடித்தனர். மேலும் இதுகுறித்து ஒரத்தநாடு போலீசார் வழக்குப்பதிவு செய்து அசோக்குமாரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com