புயலை எதிர்கொண்டு மக்களைக் காக்க அரசு தயாராக உள்ளது - ஓ.பன்னீர்செல்வம்

புயலை எதிர்கொண்டு மக்களைக் காக்க தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் தமிழக அரசு தயார் நிலையில் உள்ளது என துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் தெரிவித்தார்.
துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்
துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்
Published on

சென்னை:

நிவர் அதிதீவிர புயலாக மாறி கரையை கடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் 8 மாவட்டங்களில் அதீத கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்து இருந்தது. இதனால் புயலை எதிர்கொண்டு மக்களை காக்க அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தமிழக அரசு எடுத்து வருகிறது.

இந்நிலையில், நிவர் புயலை எதிர்கொண்டு மக்களைக் காக்க அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன்  அரசு தயாராக உள்ளது என துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். 

இதுதொடர்பாக ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:

நிவர் புயலை எதிர்கொண்டு மக்களைக் காக்க அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடனும் அரசு தயாராக உள்ளது. புயல் காரணமாக பலத்த காற்று வீசுவதாலும், கனமழை பெய்வதாலும் இச்சமயங்களில் பொதுமக்கள் தேவையின்றி வெளியில் செல்வதை தவிர்த்து பாதுகாப்பாக இருக்கும்படி அன்போடு கேட்டுக்கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com