மகளை பலாத்காரம் செய்த தந்தைக்கு ஆயுள் தண்டனை- ஊட்டி மகளிர் கோர்ட்டு தீர்ப்பு

கூடலூர் அருகே 14 வயது மகளை பலாத்காரம் செய்த தந்தைக்கு ஆயுள் தண்டனை விதித்து ஊட்டி மகளிர் கோர்ட்டு தீர்ப்பு வழங்கியுள்ளது.
கோப்பு படம்.
கோப்பு படம்.
Published on

ஊட்டி:

நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த 44 வயது ஜவுளி வியாபாரிக்கு திருமணமாகி மனைவி மற்றும் 14 வயது மகள் உள்ளனர். இந்த நிலையில் மனைவி வெளியே சென்றபோது தனது மகள் என்றும் பாராமல் அவரை பலாத்காரம் செய்து உள்ளார். இது குறித்து பாதிக்கப்பட்ட சிறுமி கடந்த 2017-ந் தேதி செப்டம்பர் மாதம் 21-ந் தேதி கூடலூர் மகளிர் போலீசில் புகார் செய்தார். 

இதையடுத்து போலீசார் ஜவுளிவியாபாரியை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். இது தொடர்பான வழக்கு ஊட்டி மகளிர் கோர்ட்டில் நடந்து வந்தது.

இந்த வழக்கு விசாரணை முடிந்ததை தொடர்ந்து நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. அதன்படி குற்றம் சாட்டப்பட்ட ஜவுளி வியாபாரிக்கு, மகளை பலாத்காரம் செய்ததற்கு ஆயுள் தண்டனையும், மிரட்டல் விடுத்ததற்கு 2 ஆண்டு சிறையும் விதித்து நீதிபதி அருணாசலம் தீர்ப்பு கூறினார். மேலும் ரூ.10 லட்சம் அபராதம் விதித்தும், அபராத தொகையை கட்ட தவறினால் கூடுதலாக 5 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்படும் என்றும் அவர் தனது தீர்ப்பில் கூறினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com