சோபியான் என்கவுண்டர்- ஒரு பயங்கரவாதியை சுட்டுக்கொன்றது ராணுவம்

பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்ததையடுத்து போலீசார் மற்றும் பாதுகாப்பு படையினர் அப்பகுதியில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
தேடுதல் வேட்டையில் ராணுவம்
தேடுதல் வேட்டையில் ராணுவம்
Published on

ஜம்மு:

ஜம்மு காஷ்மீரின் சோபியான் மாவட்டம், ஷிர்மல் பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் மற்றும் பாதுகாப்பு படையினர் அப்பகுதியை சுற்றி வளைத்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

அப்போது, பாதுகாப்பு படையினரை நோக்கி பயங்கரவாதிகள் துப்பாக்கி சூடு நடத்தினர். பாதுகாப்பு படையினரும் பதிலடி கொடுத்தனர். இந்த சண்டையில் ஒரு பயங்கரவாதி கொல்லப்பட்டுள்ளான். தொடர்ந்து தேடுதல் வேட்டை நடைபெறுகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com