மும்பையில் 60 மாடி கட்டிடத்தில் பயங்கர தீ விபத்து

மும்பையில் உள்ள அவிக்னாபார்க் அடுக்குமாடி குடியிருப்பு பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒருவர் உயிரிழந்தார்.
அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து
அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து
Published on

மும்பையில் உள்ள குர்ரே சாலையில் அவிக்னாபார்க் என்ற அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. இது 60 மாடிகளைக் கொண்டது.

இந்த கட்டிடத்தில் 19-வது மாடியில் உள்ள ஒரு வீட்டில் இன்று மதியம் 12.25 மணியளவில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. அந்த தீ அருகில் உள்ள வீடுகளுக்கும் பரவியது. இதனால் 18 மற்றும் 19-ம் மாடியில் உள்ள பல வீடுகள் தீப்பற்றி எரிந்தன.

இதுபற்றிய தகவல் தீயணைப்பு படைக்கு தெரிவிக்கப்பட்டது. உடனே 10-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள் அந்த இடத்துக்கு வந்தன. அவர்கள் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டார்கள். கட்டிடத்தில் தீ பிடித்த பகுதி உயரமான இடத்தில் இருந்ததால் நவீன எந்திர வாகனத்தின் ஏணியின் மூலமாக அந்த பகுதிக்கு சென்றார்கள். அங்கிருந்து தண்ணீர் பீய்ச்சி அடித்து தீயை அணைக்கும் பணி நடந்தது.

இந்நிலையில் அவிக்னாபார்க் அடுக்குமாடி குடியிருப்பு பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒருவர் உயிரிழந்தார்.

மேலும் முழுமையாக தீயை அணைத்த பிறகுதான் மற்ற விவரங்கள் தெரிய வரும் என்று அதிகாரிகள் தெரிவித்தார்கள்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com