மதுக்கடையில் புகுந்து திருடியவர் கைது- மது பாட்டில்கள் பறிமுதல்

மதுக்கடையில் புகுந்து திருடியவரை கைது செய்த போலீசார் அவரிடமிருந்து மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
பறிமுதல் செய்யப்பட்ட மது பாட்டில்கள்
பறிமுதல் செய்யப்பட்ட மது பாட்டில்கள்
Published on

புதுச்சேரி:

புதுவை 100 அடி ரோட்டில் உள்ள மதுபான கடையில் கடந்த 15-ந்தேதி இரவு மர்ம நபர்கள் கடையின் ஜன்னல், கதவினை உடைத்து கடைக்குள் புகுந்து ரூ.1½ லட்சம் ரொக்கம் மற்றும் விலை உயர்ந்த மதுபான பாட்டில்களை திருடிச் சென்றனர். இதுகுறித்து உருளையன்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் சஜித் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தார். மதுக்கடையின் அருகில் இருந்த கண்காணிப்பு கேமராக்கள் மூலம் குற்றவாளிகள் அடையாளம் காணப்பட்டனர்.

இதன்படி புதுவை வம்பாகீரப்பாளையம் திப்புராயப்பேட்டையை சேர்ந்த மனோகர் (வயது 58) என்பவர் தனது தங்கை மகன்களான திருமால் நகரை சேர்ந்த செல்வகணபதி, பிரான்சுவா ஆகியோருடன் சேர்ந்து மதுக்கடையில் புகுந்து திருடியது தெரியவந்தது. இதையடுத்து மனோகர் கைது செய்யப்பட்டார். அவரிடமிருந்து ரூ.10 ஆயிரம் ரொக்கம் மற்றும் 118 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. தலைமறைவாக உள்ள செல்வகணபதி, பிரான்சுவா ஆகியோரை போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள். இந்த வழக்கில் திறமையாக செயல்பட்ட போலீசாரை சீனியர் போலீஸ் சூப்பிரண்டு பிரதிஷா கோத்ரா, போலீஸ் சூப்பிரண்டு மாறன் ஆகியோர் பாராட்டினார்கள்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com