குடும்பத்தினருடன் வீட்டுக்காவலில் இருப்பதாக உமர் அப்துல்லா தகவல்

காஷ்மீர் முன்னாள் முதல்-மந்திரியும், தேசிய மாநாட்டு கட்சி துணைத்தலைவருமான உமர் அப்துல்லா, தானும், தன் குடும்பத்தினரும் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.
உமர் அப்துல்லா
உமர் அப்துல்லா
Published on

ஸ்ரீநகர்:

காஷ்மீர் முன்னாள் முதல்-மந்திரியும், தேசிய மாநாட்டு கட்சி துணைத்தலைவருமான உமர் அப்துல்லா, தானும், தன் குடும்பத்தினரும் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.

அவர் தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

நானும், எம்.பி.யாக இருக்கும் என் தந்தை பரூக் அப்துல்லாவும் எனது வீட்டில் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டு இருக்கிறோம். அதுபோல், என் சகோதரியும், அவருடைய குழந்தைகளும் அவர்களது வீட்டில் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளனர். இதற்கு எந்த விளக்கமும் அளிக்கப்படவில்லை. எங்கள் வீட்டில் வேலை செய்யும் ஊழியர்களையும் வீட்டுக்குள் அனுமதிக்கவில்லை. இதுதான் 2019-ம் ஆண்டு ஆகஸ்டு மாதத்துக்கு பிந்தைய புதிய காஷ்மீர்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார். தன் வீட்டுக்கு வெளியே போலீஸ் வாகனங்கள் நிற்கும் புகைப்படங்களையும் அவர் வெளியிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com