ஓமலூர் அருகே கடையில் திருட்டு

ஓமலூர் அருகே கடையில் திருட்டு சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருட்டு
திருட்டு
Published on

ஓமலூர்:

ஓமலூரை அடுத்த பல்பாக்கி பகுதியை சேர்ந்தவர் நல்லியண்ணன். இவரது மகன் சதாகுமார் (வயது 41). இவர் ஓமலூர்-தர்மபுரி மெயின்ரோட்டில் நேஷனல் நகர் அருகே டிபார்ட்மெண்டல் ஸ்டோர் நடத்தி வருகிறார். இவர் கடந்த 10-ந்தேதி கடையினை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றுவிட்டார். மறுநாள் காலை வந்து பார்த்தபோது மேற்கூரை உடைக்கப்பட்டு கடையில் இருந்த ரூ.20 ஆயிரம் திருட்டு போனது தெரியவந்தது. இது குறித்து சதாகுமார் ஓமலூர் போலீசில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு கைரேகை பதிவு செய்யப்பட்டது. அங்குள்ள கண்காணிப்பு கேமரா மூலம் போலீசார் துப்பு துலக்கி வருகிறார்கள்.

X

Maalai Malar
www.maalaimalar.com