வலங்கைமான் அருகே விஷம் குடித்து மூதாட்டி தற்கொலை

வலங்கைமான் அருகே உடல் வலியால் அவதிப்பட்டு வந்த மூதாட்டி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
தற்கொலை
தற்கொலை
Published on

வலங்கைமான்:

வலங்கைமான் அருகே உள்ள சித்தன்வாழுர் மாதா கோவில் தெருவை சேர்ந்தவர் சாவித்திரி(வயது65). இவர் தீராத உடல் வலியால் அவதிப்பட்டு வந்தார். இதனால் மனமுடைந்த சாவித்திரி வயலுக்கு தெளிக்கும் பூச்சிக்கொல்லி மருந்தை (விஷம்) குடித்து மயங்கி விழுந்தார். 

அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு, தஞ்சாவூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சாவித்திரி பரிதாபமாக உயிரிழந்தார். 

இது குறித்து வலங்கைமான் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com