வாணியம்பாடியில் ரெயிலில் அடிபட்டு மூதாட்டி பலி

வாணியம்பாடி ரெயில் நிலையத்தில் தண்டவாளத்தை கடக்க முயன்ற மூதாட்டி ரெயிலில் அடிபட்டு பரிதாபமாக உயிரிழந்தார்.
கோப்பு படம்.
கோப்பு படம்.
Published on

ஜோலார்பேட்டை:

வாணியம்பாடி ரெயில் நிலையத்தில் உள்ள யார்டு பகுதியில் 60 வயது மதிக்கத்தக்க மூதாட்டி தண்டவாளத்தை கடக்க முயன்றுள்ளார். அப்போது ஜோலார்பேட்டையில் இருந்து சென்னை நோக்கி சென்ற ரெயிலில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்தும் ஜோலார்பேட்டை ரெயில்வே சப்-இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மூதாட்டியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து, இறந்த மூதாட்டி யார்? எந்த ஊரை சேர்ந்தவர் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com